முன்னாள் ஜனா­தி­ப­தி­களின் உரித்­து­ரி­மை­களை நீக்கும் சட்டத் திருத்தம், நிறை­வேற்­றப்­பட்ட பின்னர், விஜே­ராம மாவத்தை இல்­லத்தில் இருந்து, மஹிந்த ராஜபக் ஷ ஆர­வா­ரங்­க­ளுடன்பு றப்­பட்டுச் சென்­றி­ருக்­கிறார்.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் அவர் தோல்­வி­ய­டைந்த பின்னர், முதல் முறை­யாக அலரி மாளி­கையில் இருந்து வெளி­யேறி, தங்­கா­லைக்குத் திரும்­பினார்.

அப்­போது அவரை அலரி மாளி­கையில் இருந்து வழி­ய­னுப்பி வைப்­ப­தற்கு, ஆத­ர­வா­ளர்கள் யாரும் வந்­தி­ருக்­க­வில்லை. அவ­ரது நெருங்­கிய அமைச்­ச­ரவை சகாக்கள் சிலர் மாத்­திரம் கூடி­யி­ருந்­தார்கள்.

அவர் ஆட்­சியை ஒப்­ப­டைக்க மறுக்­கிறார் என தக­வல்கள் வெளி­யான நிலையில், அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­ல­ராக இருந்த ஜோன் கெரி, அந்த விவ­கா­ரத்தில் தலை­யிட்டு, சுமூ­க­மான ஆட்­சி­மாற்றம் நடை­பெற வேண்டும் என அறி­வித்­த­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

அதன் பின்னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அலரி மாளி­கைக்கு அழைக்­கப்­பட்டு, பாது­காப்­பாக மஹிந்த ராஜ பக் ஷ வெளி­யே­று­வ­தற்கு உத்­த­ர­வாதம் அளிக்­கப்­பட்­டது. அதன்­படி அவர் ஹெலி­கொப்டர் மூலம், தங்­கா­லைக்குத் திரும்பிச் சென்றார். அங்கு அவரை வர­வேற்க ஒரு கூட்டம் காத்­தி­ருந்­தது.

சில காலம் அவர் தங்­கா­லையில் உள்ள கார்ல்டன் இல்­லத்தில் தங்கி இருந்­த­போது, தினமும் நூற்­றுக்­க­ணக்­கான ஆத­ர­வா­ளர்கள் அவரைத் தேடிச் சென்று சந்­தித்து ஆறுதல் கூறினர்.

இப்­பொ­ழுது மஹிந்த ராஜபக் ஷ இரண்­டா­வது முறை­யாக தங்­கா­லைக்குத் திரும்பிச் சென்­றி­ருக்­கிறார்.

அர­சாங்கம் நிறை­வேற்­றிய சட்டத்திருத்­தத்தின் படி, அவரால் விஜே­ராம மாவத்தை இல்­லத்தில் தங்கி இருக்க முடி­ய­வில்லை. இதனால் அவர் தானா­கவே வெளி­யேறி சென்றார்.

அவர் வெளி­யேறிச் சென்ற போது, அவரை வழி அனுப்­பு­வ­தற்கு ஆத­ர­வா­ளர்கள் மாத்­திரம் வர­வில்லை, சீனத்­தூ­துவர் கீ சென்­ஹொங்கும், வந்­தி­ருந்தார்.

அவர் கார்ல்டன் இல்­லத்­துக்குச் சென்ற போது அங்கு பெரு­மெ­டுப்­பி­லான வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

எது எப்­ப­டியோ மஹிந்த ராஜ­பக்ஷ மீண்டும் தங்­கா­லைக்குத் திரும்பி இருப்­பதை அவ­ரது அர­சியல் வாழ்வின் முடி­வாக கரு­தப்­ப­ட­வில்லை.

அவர் விஜே­ராம மாவத்தை இல்­லத்தை விட்டுச் செல்­லும்­போது, அர­சி­யலில் இருந்து விலகப் போவ­தில்லை என உறு­தி­யாகக் கூறி­யி­ருந்தார்.

அவர் மீண்டும் கொழும்­புக்கு திரும்­பு­வாரா இல்­லையா என்று தெரி­ய­வில்லை.

ஆனால், அவரை மீண்டும் கொழும்­பிற்கு கொண்டு வர, தீவிர அர­சி­ய­லுக்கு இழுத்து வரு­வ­தற்கு முயற்­சிகள் நடக்­கின்­றன என்­பது தெளி­வாகத் தெரி­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ இப்­பொ­ழுது உட­ல­ளவில் தளர்ந்து போயி­ருக்­கிறார்.

அவர் அர­சி­யலில் தொடர்ந்து நிலைத்­தி­ருப்பேன் என்று கூறு­வ­தற்கு அடிப்­படைக் காரணம், தனது வாரி­சு­களின் அர­சி­யலை நிலைநிறுத்திக் கொள்­வது தான்.

நாமல் ராஜபக் ஷவை ஆட்­சியில் அமர்த்த வேண்டும் என்றால் மஹிந்த ராஜபக் ஷ அர­சி­யலில் தொடர்ந்­தி­ருக்க வேண்டும்.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வி­ய­டைந்து அவர் முதல்­மு­றை­யாக கார்ல்­ட­னுக்குத் திரும்­பிய போது, அவரை மீண்டும் அர­சி­ய­லுக்கு இழுத்து வரு­வ­தற்கு பலர் முயன்­றார்கள். விமல் வீர­வன்ச, உதய கம்மன்பில உள்­ளிட்­ட­வர்கள் அவர்­களில் முக்­கி­ய­மா­ன­வர்கள்.

இப்­பொ­ழுது அவரை இழுத்து வரு­வ­தற்கு அவர்கள் அவ­ருடன் கூட்­ட­ணியில் இல்லை. ஆனாலும், விமல் வீர­வன்ச தங்­கா­லைக்குச் சென்று மஹிந்­தவைச் சந்­தித்­தி­ருக்­கிறார்.

அதே­வேளை, மஹிந்த ராஜபக் ஷ விஜே­ராம இல்­லத்தை விட்டு வெளி­யே­றிய போது, சீனத் தூதுவர் அங்கு சென்று அவரைச் சந்­தித்­தமை அர­சியல் மட்­டத்தில் முக்­கி­ய­மான பேசு­பொ­ரு­ளா­கவும் பிரச்­சா­ர­மா­கவும் பார்க்­கப்­பட்­டது. சீனத் தூதுவர் ஏன் மஹிந்­தவை சந்­திக்க சென்றார் என்ற கேள்வி வலு­வாக இருந்­தது.

தற்­போ­தைய அர­சாங்கம் சீன சார்பு அர­சாங்கம் என்ற பெய­ருடன் இருந்­தாலும், அது அமெ­ரிக்­கா­வுடன் அதிகம் நெருங்கிச் செயற்­ப­டு­கி­றது.

இந்தச் சூழலில், தங்­களின் பழைய கூட்­டா­ளி­க­ளுடன் நட்­பு­றவை வலுப்­ப­டுத்த சீனா முற்­ப­டு­கி­றதா என்ற கேள்­வி­களும் எழுப்­பப்­ப­டு­கின்­றன.

தற்­போ­தைய அர­சாங்கம் நெருக்­க­மா­ன­தாக இருந்­தாலும், தான் அதிகம் நம்­பு­கின்ற கூட்­டா­ளி­க­ளாக ராஜபக் ஷ வினரை சீனா வைத்­தி­ருக்­கி­றது என்­பதே உண்மை. ஏனென்றால் ஜே.வி.பியின் அர­சியல் வர­லாறு, சித்­தாந்த ரீதி­யாக இறுக்­க­மா­ன­தல்ல. அது நிகழ்­வுத்­தன்மை கொண்­ட­தா­கவே இருந்து வந்­தி­ருக்­கி­றது.

ஆரம்ப காலத்தில் அது மொஸ்­கோவை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­பட்­டது. பின்னர் அது பெய்ஜிங் சார்­பு­டை­ய­தாக மாறி­யது. அதற்குப் பின்னர், வட­கொ­ரி­யாவின் ஆத­ர­வு­ட­னேயே, 1971 கிளர்ச்­சியில் ஈடு­பட்­டது. இப்­படிக் காலத்­துக்கு காலம் அது தன்னை மாற்றிக் கொண்­டது. இப்­போது அது அமெ­ரிக்­கா­வுடன் உறவு வைத்துக் கொள்­வ­தற்கும் கூட தயா­ராகி விட்­டது.

ஆக, ஜே.வி.பியை முற்று முழு­தாக நம்­பி­யி­ருக்க முடி­யாத நிலை சீனா­வுக்கு இருக்­கி­றது.

ஆனால் ராஜபக் ஷவினர் அப்­ப­டி­யல்ல, அவர்கள் எப்­போதும் சீனாவின் செல்­லப்­பிள்­ளை­க­ளா­கவே இருந்து வந்­த­வர்கள்.

அவர்கள் சீனா­வுக்கு ஆத­ர­வா­கவே செயல்­பட்டு வந்­த­வர்கள். சீனா­வினால் இயக்­கப்­பட்­ட­வர்கள்.

அவர்­களை சீனா எப்­போதும் நம்­பு­கி­றது.

முன்னர் ஒரு காலத்தில், எதிர்க்­கட்­சியை சேர்ந்­த­வர்­க­ளுடன் சீனா பெரும்­பாலும் தொடர்­பு­களை வைத்துக் கொள்­வ­தில்லை.

தாங்கள் அர­சாங்­கத்­துடன் மாத்­திரமே தொடர்­பு­களை வைத்துக் கொள்வோம் என, இலங்­கைக்­கான சீனத் தூதுவர் ஒருவர், பல ஆண்­டு­க­ளுக்கு முன்னர் கூறி­யி­ருந்தார். அப்­போது ராஜபக் ஷவினர் ஆட்­சியில் இருந்­தனர்.

ராஜபக் ஷவினரின் ஆட்சி இல்­லாமல் போன பின்னர், சீனத் தூது­வர்­களால் அவ்­வாறு கூறக்­கூ­டிய நிலை இருக்­க­வில்லை. ஏனென்றால் அவர்­க­ளுக்கு ஆட்­சியில் இருப்­ப­வர்­களும் தேவைப்­பட்­டார்கள், ஆட்­சியில் இல்­லாத ராஜபக் ஷவிவினரும் தேவைப்­பட்­டார்கள்.

அதனால் அவர்­க­ளுடன் தொடர்­பு­களை பேணிக் கொள்­வ­தற்­காக, பல்­வேறு அர­சியல் கட்­சி­க­ளையும் அவர்கள் அர­வ­ணைத்துக் கொண்­டார்கள்.

அதன்­பின்­னர்தான், அர­சியல் கட்­சி­க­ளுக்கும் சீன கம்­யூனிஸ்ட் கட்­சிக்கும் இடை­யி­லான உற­வா­டல்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இப்­பொ­ழுது சீனா, ராஜபக் ஷவி­ன­ரு­ட­னான, தனது நெருங்­கிய உற­வு­களை சமப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக, ஏனை­ய­வர்­க­ளையும் அவ்­வப்­போது சந்­தித்துக் கொள்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ விஜே­ராம மாவத்தை இல்­லத்தை விட்டு வெளி­யே­றிய போது, சீனத் தூதுவர் அவரை சந்­தித்த விடயம், அர­சாங்­கத்­திற்கு கூட ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யது. ஏனென்றால் அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கையால் தான் மஹிந்த ராஜபக் ஷ வெளி­யேற்­றப்­பட்டார்.

அவ­ருக்கு பின்னால் சீனா இருக்­கி­றது என்ற செய்தி, அர­சாங்­கத்­துக்கு ஏற்­றுக்­கொள்ளக் கூடிய ஒன்­றாக இருக்­க­வில்லை.

இந்தச் சூழலில் சீனத் தூதுவர், அடுத்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் சந்­தித்தார். இது அர­சாங்­கத்தை இன்­னமும் குழப்­பத்­திற்கு உள்­ளாக்­கி­யது.

ஏனென்றால் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அண்­மையில் பொதுச் சொத்­துக்­களை தவ­றாகப் பயன்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்டு விடு­விக்­கப்­பட்­டவர்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க கைது செய்­யப்­பட்டு விடு­விக்­கப்­பட்ட பின்னர், அவரை சந்­தித்த முத­லா­வது வெளி­நாட்டு உயர் இரா­ஜ­தந்­திரி சீனத் தூதுவர் தான்.

இந்த இரண்டு சந்­திப்­பு­களும் அர­சாங்­கத்­துக்கு எதி­ரான வியூ­கத்தை சீனா வகுக்­கி­றதா என்ற சந்­தே­கங்­களை உரு­வாக்­கி­யது. அதனைத் தொடர்ந்து சீனத் தூதுவர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் சந்­தித்­தி­ருக்­கிறார்.

ஆக, பத­வியில் இருந்து வில­கிய முன்னாள் ஜனா­தி­ப­திகள் மூவ­ரையும் சந்­தித்­ததன் மூலம் சீனத்­தூது வர் ஒருவித சமத்துவ நிலையை வெளிப்படுத்த முனைந்திருக்கிறார்.

ஆனால், என்னதான் மறைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டாலும், சீனாவுக்கும் ராஜபக் ஷவினருக்கும் இடையிலான நெருக்கம் என்பது வெளிப்படையானது, மறுக்க முடியாதது. ஜே.வி.பி. தலைமையிலான அரசாங்கத்தை, சீனா தன் கைக்குள் வைத்திருக்க விரும்பினாலும், சீனாவின் விருப்புக்குரியவர்களாக ராஜபக் ஷவினரே இருக்கிறார்கள்.

அதனால் தான் ஆட்சியில் இல்லாத போதும் அவர்களுடன் நெருங்கிய உறவாடல்களை சீனா வைத்துக் கொள்கிறது.

அவர்கள் சீனாவுடன் நெருங்கி செல்வதை உணர்ந்து, இந்திய தூதுவரும் ராஜபக் ஷவினரை கையாளுவதிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

இவையெல்லாம் ராஜபக் ஷவினர் அரசியலில் இருந்து முழுமையாக அகற்றப்பட்டுவிடவில்லை, அகற்றப்படுவதை பிராந்திய சக்திகள் விரும்பவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றன.

-கார்­வண்ணன்

Share.
Leave A Reply

Exit mobile version