நீர்கொழும்வில் வீடுகளில் கொள்ளையிடும் மோசடியில் ஈடுபட்டு வந்த தாயும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டு வேலைகளுக்கு பணியாளர்களை வழங்கும் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணும் அவரது மகனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரான பெண், தனது மகன் தலைமையிலான கும்பலுடன் நீண்ட காலமாக வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெம்முல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் சந்தேகநபரான பெண் பணியாளராக அனுப்பப்பட்டுள்ளார்.
இதனை சாதகமான கொண்டு இரவு நேரத்தில் தனது மகன் தலைமையிலான கும்பலுடன், வீட்டு உரிமையாளர்களை கட்டிவைத்து, 1.5 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நகைகளை திருடியுள்ளனர்.
இது குறித்து பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, 24 மணி நேரத்திற்குள் பெம்முல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் ஹங்குரான்கெத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் 3 கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கும்பல் நாடு முழுவதும் சுமார் 10 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.