மழையுடனான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் முப்பதாயிரம் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்தடையால மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்லதாக கூறப்படுகின்றது. பல பிரதேசங்களில் கடும் மழையுடனான வானிலை நிலவி வருகின்றது.
எனினும், தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மின் விநியோகத் தடையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார்.