போதைப்பொருள் வாங்க பணம் கொடுக்காததால் உயிர்மாய்ப்பு -யாழில் நடந்த சம்பவம்-
யாழில் போதைக்கு அடிமையான நபரொருவர் நேற்று திங் கட்கிழமை தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

சுழிபுரம் – மூளாய் பகுதியைச் சேர்ந்த தயாபரன் முரளிவாசன் (வயது 34) என்பவரே இவ் வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்:- இவர் போதைக்கு அடிமையாகியிருந்த நிலையில் தனது சகோதரியிடம் போதைப் பொருளுக்கு பணத்தினை கேட் டுள்ளார். சகோதரி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வீட்டினுள் சென்று தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசா ரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். வட்டுக்கோட்டை பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத் தினர்.

Share.
Leave A Reply

Exit mobile version