பதுளை மடுல்சீமை பகுதியிலுள்ள சிறிய உலக முடிவில் தொடர்ந்தும் குளவிக்கொட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

அந்த வகையில் இன்று சுற்றுலா பயணிகள் 27 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

அவர்களில், ஒருவர் படுகாயமடைந்து லுணுகலை மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலபே பகுதியில் இருந்து சுற்றுலாச் சென்று அங்கு கூடாரமிட்டிருந்தவர்களே குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பகுதிக்கு சுற்றுலா சென்றவர்கள் நேற்றும் குளவிக்கொட்டுக்கு இலக்காகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version