மாத்தறை, வெல்லமடம பகுதியில் வீதி தடையினை மீறி வாகனம் ஓட்டிச் சென்ற கார் மீது பொலிஸார்  துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸார், காரை நிறுத்துமாறு உத்தரவிட்டபோதும் உத்தரவை மீறி காரினை தொடர்ந்து ஓட்டிச் சென்ற நிலையில் இந்த துப்பாக்கி பிரேயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்ட கார், மாத்தறை, ஜனராஜ மாவத்தை பகுதியில்  கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

குறித்த காரில் பயணித்தவ இருவரும் தப்பிச் சென்ற நிலையில் மோட்டார் வாகனத்தின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version