புத்தளம், வென்னப்புவை – உல்ஹிடியாவ பகுதியில் உள்ள கடலில் மூழ்கி ஒருவர்உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வென்னப்புவை – கொலிஞ்சாடிய பகுதியை சேர்ந்த 65 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கடற்கரையோரங்களில் மீன் விற்பனை செய்யும் நபர்களிடம் பணியாளராகப் பணிபுரிந்த ஒருவரே, அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வென்னப்புவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version