தென் பிலிப்பைன்ஸில் இன்று (17) 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலக்கத்தால் உயிரிழப்புகள் சேதம் தொடர்பில் எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

“திடீரென வலுவான ஒரு நிலநடுக்கத்தை நாங்கள் உணர்ந்தோம், ஆனால் அது மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே இருந்தது,” என மாகாண அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மீட்பு அதிகாரி ரால்ப் கேடலேனா கடலீனா தெரிவித்துள்ளார்.

சூரிகாவ் டெல் நோர்டே மாகாணத்தில் உள்ள டாபா நகராட்சிக்கு அருகில் சுமார் 69 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை  பிலிப்பைன்ஸ் மிண்டானாவ் தீவின் கிழக்குப் பகுதியில் 7.4 மற்றும் 6.7 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு சுமார் எட்டு பேர் உயிரிழந்து ஒரு வாரம் கழித்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள செபு மாகாணத்தில் சில நாட்களுக்கு முன்னர் பதிவான 6.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version