செவ்வந்தி வாக்குமூலம்- பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தமைக்கான காரணத்தை இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

எனக்கு ஐரோப்பாவுக்கு செல்ல ஆசை. பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே என்பவர் என்னை ஐரோப் பாவுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்தார்.

அதனால் தான் நான் பணத்தை பெற்றுக் கொள்ளாமல் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தேன் என இஷாரா செவ்வந்தி பொலிஸா ரிடம் வாக்குமூலம் வழங் கியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

நேபாளத்தில் தலைம றைவாக இருக்கும் போது ஐரோப்பாவுக்கு செல்வதற்காக போலி கடவுச்சீட்டு. தயாரிக்கப்பட்டது எனவும் இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் வாக்கு மூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்ப லைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ் வந்தி உட்பட இருவரே கணேமுல்ல சஞ்சீவ என் பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனை யடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்பு டைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறை வாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்ரோபர் 14 கைதுசெய் யப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version