-வடக்கில் 7 ஆயிரம் குடும்பங்களுக்கு நேரடி பாதிப்பு-
இலங்கையிலிருந்து அமெரிக்கா வுக்கு நண்டு ஏற்றுமதி 2026 தை மாதம் 1ம் திகதி தொடக்கம் நிறுத்த ப்படவுள்ள நிலையில், வடக்கில் நண்டு தொழிலை நம்பியிருந்த
சுமார் 7 அயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு நீல கால் நண்டு ஏற்றுமதியில் வடமாகாணம் முதல் நிலையில் உள்ளது.
குறிப்பாக நண்டு ஏற்றுமதியின் ஊடாக அரசாங்கம் 1 மில்லியன் அன்னிய செலாவணியை இலங்கை பெறுகிறது. வடமாகாணத்தில் மன் னார் தொடக்கம் நெடுந்தீவு வரையான கடற்பகுதியில், வருடம் முழுவதும் நண்டு தொழில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இங்கிருந்தே அதிகளவிலான நண் டுகள் அமெரிக்காவுக்கு 6 கிழமைக ளுக்கு ஒரு தடவை ஏற்றுமதி செய்யப் படுகிறது.
இந்த ஆண்டு ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டு வடக்கில் நான்கு நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட் டுள்ள நிலையில் பெண் தலைமைத் துவ குடும்பங்கள் உட்பட சுமார் 2 ஆயிரம் பெண்கள் தொழில் புரிகின்ற நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
அமெரிக்க அரசாங்கம் கடல் பாலூட்டிகளை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ்
பாலூட்டி இனங்களை தமது நாட் டுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளிட மிருந்து பாலூட்டிகளை பாதுகா க்கும் சான்றிதழ்களை பெற்று வருகிறது.
இதன் அடிப்படையில் இலங்கை குறித்த சான்றிதழை வழங்குவதற்கு இரண்டு வருடங்கள் தாமதித்ததன் கா ணமாக இலங்கையில் இருந்து நண்டு ஏற்றுமதியை 2026 ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதியி இருந்து நிறுத்துவதற்கு அமெரிக்கா தீர்மானி த்துள்ளது.
இந்தத் தடையை அமெரிக்கா நீக்குவதற்கு தடை அமுல் படுத்தப்பட்ட காலத்துக்கு பின்னரே பரிசீலிக்க வாய்ப்பு உள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் வடக்கு தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமை ஏற் பட உள்ளது.

