கொழும்பு 01 – 15 வரையில் இன்று (23) 10 மணித்தியாலம் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை 10.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

இதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளுக்கும், பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொடை, கோட்டை, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டி, ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version