மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தறை – காலி பிரதான வீதியில் உள்ள வைத்தியசாலைக்கு அருகில், நேற்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த வீதியில், சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்ற நபர் மீது மாத்தறை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

காயமடைந்த நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாத்தறை, மெதவத்தை பகுதியைச் சேர்ந்த 77 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனைகளுக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version