மொனராகலை பிரதேசத்தில் தன்னுடன் தகாத தொடர்பில் இருந்தா நபரை வரவைத்து அவர் மீது தாக்குதல் நடத்தி, பலவந்தமாக நஞ்சூட்டி படுகொலைச் செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன், அவரது சகோதரிகள் இருவர் மற்றும் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டனர் என மொனராகலை தொடங்காவெல பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண்கள், 29, 32 ,36 வயதுடையவர்கள், ஆண், 25 வயதானவர் குடும்ப தகராறு காரணமாக ஒருவர் விஷம் குடித்து உயிரிழந்து மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

எனினும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அது ஒரு கொலை என்பது தெரியவந்தது . அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version