மகளிருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தி இந்தியாஅணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

இந்தியாவில் நடந்து வரும் 13ஆவது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2ஆவது அரைஇறுதியில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 49.5 ஓவரில் 338 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இந்திய தரப்பில் ஸ்ரீ சரணி, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அவுஸ்திரேலியா நிர்ணயித்த 339 ஓட்டங்கள் மாபெரும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 341 ஓட்டங்களை பெற்று வெற்றிவாகைசூடி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

இந்தியா சார்பாக அணித்தலைவி ஹர்மன் ப்ரீத்கர் 89 ஓட்டங்களை பெற்றதுடன் ஜெமீமா ரொட்ரிகர்ஸ் ஆட்டமிழக்காமல் 127 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதிசெய்தார்.

இதற்கமைய இந்தியாவும் தென்னாபிரிக்காவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உலக சாம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version