இலங்கை தடகளத்தின் வான்வெளியில் ஒரு புதிய நட்சத்திரம் திகழ்கிறது. அந்த பெயர் தான் பாத்திமா ஷாபியா யாமிக். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளம் வீராங்கனை, தன்னுடைய அதிரடியான வேகம் மற்றும் விடாமுயற்சியால் இலங்கையின் விளையாட்டு உலகில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார்.
சமூகக் கட்டுப்பாடுகள், பொருளாதார சவால்கள், பெண்கள் மீதான பாரம்பரிய தடைகள் இவை அனைத்தையும் தாண்டி, தன் கனவை நனவாக்கிய ஒரு
வீராங்கனைக்குரிய பயணமே இது.ஓட்டப்பந்தய வீராங்கனை பாத்திமா சாபியா யாமிக், இலங்கையின் விளையாட்டு வரலாற்றில் தன்னுடைய பெயரை பொற்கலமாக பதித்துக் கொண்ட இளம் வீராங்கனை ஆவார்.
முஸ்லிம் பெண்ணாக விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய இவர் நாட்டின் விளையாட்டு மேடைகளில் பெண்கள் ஆற்றும் பங்களிப்புக்கு புதிய ஒளியை வீசியுள்ளார். சிறுவயது முதலே ஓட்டப்பந்தயத்தில் அவளுக்கிருந்த
ஆர்வம், அவளின் வாழ்க்கையை ஒரு புதிய பாதைக்கு அழைத்துச் சென்றது.
1999ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் திகதி பாத்திமா பிறந்தார். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், சிறுவயதிலிருந்தே
ஓட்டத்தில் அதீத ஆர்வம் காட்டியவர்.
கண்டியின் மலைப்பாங்கான நிலப்பரப்பில், பாடசாலை நிலை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். அவரின் ஆரம்பப் பயிற்சி காலம் மிகக் கடினமானதாய் இருந்ததுடன் அந்தகாலத்தில் தடகளத்திற்குத் தேவையான வசதிகள் குறைவாக இருந்தபோதும், அவர் தன் கனவினை விட்டுவிடவில்லை.
அவருக்கு மிகுந்த ஆதரவாக இருந்தது அவரது குடும்பமும் சில பள்ளி ஆசிரியர்களுமே.பாத்திமா தனது பள்ளி வாழ்க்கையில் பல மாவட்ட அளவிலான ஓட்டப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றார். இதனால், விளையாட்டு பயிற்சியாளர்கள் இவரின் திறமையைக் கவனிக்கத் தொடங்கியதுடன் அவரது இயல்பான வேகமும், தன்னம்பிக்கையும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

கல்வியுடன் இணைந்து ஒழுக்கம், உறுதி மற்றும் விடாமுயற்சியைக் கற்றுக் கொண்ட அவர், தினசரி கடினமான பயிற்சிகளை மேற்கொண்டார். அவளின் முதல் வெற்றிகள் மாவட்ட மட்ட போட்டிகளில் தொடங்கின.
இலங்கை தடகள உலகில் தற்போது புதிய ஒளியாகப் பிரகாசிக்கும் பெயர் பாத்திமா ஷாபியா யாமிக். அவர் இலங்கையின் இளம் தலைமுறையை ஊக்குவிக்கும் ஒரு திறமையான ஓட்டப்பந்தய வீராங்கனையாக உருவெடுத்துள்ளார். அவரது வெற்றிகள் இன்று நாட்டின் தடகள வரலாற்றில் புதிய திசையை உருவாக்குகின்றன.
அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது கண்டி நகரிலுள்ள Viharamahadevi Games Club எனும் தடகள கழகமாகும். இந்தக் கிளப்பில் இணைந்த பிறகு, அவர் தேசிய அளவிலான பயிற்சியைப் பெற்றார். இதுவே
அவரது ஓட்டத்திறனை புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றது.
மெல்ல மெல்ல அவள் மாநில மட்ட போட்டிகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தத் தொடங்கினாள். நீண்ட தூர ஓட்டங்களில் அவள் காட்டிய வேகம் மற்றும் ஆற்றல் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. 800 மீட்டர்,
1,500 மீட்டர், 3,000 மீட்டர் ஓட்டங்களில் அவள் பல முறை தங்கப் பதக்கங்களை வென்றார்.
இதன் மூலம் அவள் தேசிய அளவிலான கவனத்தை ஈர்த்தார்.இலங்கை விளையாட்டுத் துறையில் முஸ்லிம் பெண்களுக்கு பல சமூக சவால்கள் இருந்தபோதிலும், பாத்திமா அந்த எல்லைகளையும் தாண்டிச் சென்றார். பெண்களுக்கான வாய்ப்புகள் குறைவாக இருந்த சூழலில், அவள் தன்னம்பிக்கையுடனும் தன்னிலை உணர்வுடனும் விளையாட்டில் முன்னேறினார்.
பலர் “பெண் குழந்தை ஓட்டத்தில் என்ன செய்ய முடியும்?” என்ற கேள்வியைக் கேட்ட போதும், அவள் தன் செயலில் பதில் அளித்தார்.அவளின் பயிற்சி பயணம் எளிதானதல்ல. அதிகாலை எழுந்து, பள்ளி மற்றும் கல்வியை இணைத்து கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டார்.
சில சமயங்களில் உணவுக்குறைவும், உபகரணங்களின் பற்றாக்குறையும் இருந்தபோதும், அவள் மன உறுதியை இழக்கவில்லை. இலங்கை விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் சிறப்பு பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலிலும், தனிப்பட்ட முயற்சியிலும் அவள் முன்னேறினாள்.
பயிற்சியாளர்கள் அவளின் உறுதியையும் மனவலிமையையும் பாராட்டினர். அவர்களிடம் இருந்து அவள் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம் “வெற்றி தூரத்தில் இல்லை, உழைப்பின் முடிவில் தான் உள்ளது” என்பதுதான். அந்த நம்பிக்கையை அவள் தனது ஒவ்வொரு ஓட்டத்திலும் நிரூபித்தார்.
சாபியா யாமிக் பல்வேறு தேசிய போட்டிகளில் பங்கேற்று, தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களைப் பெற்றார். 2023 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விழாவில் அவளின் ஓட்டம் பலரின் கவனத்தை ஈர்த்தது. அவளின் பெயர் ஊடகங்களில் பெருமையாகச் சொல்லப்பட்டது.
இவரின் பயிற்சி முறைமைகள் சர்வதேச தரத்தில் அமைந்திருந்தன. அவர் பயிற்சியில் வேகம், தூரம், வளைவு ஓட்டம், திடீர் தொடக்கம் (start), மற்றும் நிதானமான முடிவு (finish) ஆகிய அனைத்திலும் கவனம் செலுத்தினார். இதன் விளைவாக அவர் சில ஆண்டுகளில் தேசிய மட்ட வீராங்கனையாக உயர்ந்தார்.
அவரது ஆரம்ப சாதனைகள் தேசிய மட்டப் போட்டிகளில் வெளிப்பட்டன. பெண்கள் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டங்களில் தொடர்ந்து வெற்றிபெற்று, ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார்.
அவரது இயல்பான வேகமும் திறனும் அவரை விரைவில் சர்வதேச மேடைக்கு அழைத்துச் சென்றன.ஊடக பேட்டிகளில் பாத்திமா சாபியா தனது அனுபவங்களை வெளிப்படுத்தியபோது, “நான் ஓடுவது வெறும் பதக்கத்துக்காக அல்ல, என் சமூகத்தில் உள்ள பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்கவே” என்றார்.
அந்த வார்த்தைகள் பல இளம் பெண்களின் இதயத்தில் ஊக்கத்தை விதைத்தன.
அவள் எதிர்கொண்ட சவால்களில் சமூக அழுத்தமும், மத நெறிமுறைகளின் கட்டுப்பாடுகளும் முக்கியமானவையாக இருந்தன என்பதை அச் சமூகப் பெண்ணாக என்னாலும் உணர முடிகின்றது .
சில சமயங்களில் அவளுக்கு விளையாட்டுத் துறையில் இடம் பிடிக்க முடியாது என்றே கூறப்பட்டது. ஆனால், அவள் தன்னம்பிக்கையுடன் முன்னேறி அந்த விமர்சனங்களைப் புறக்கணித்தார்.
விளையாட்டில் பெற்ற அனுபவம் அவளுக்கு வாழ்க்கைப் பாடங்களாக மாறின. தோல்வி அவளுக்கு தடையாக அல்ல, புதிய ஆரம்பமாக மாறியது. ஒவ்வொரு தோல்வியும் அவளின் அடுத்த வெற்றிக்கான அடித்தளமாக அமைந்தது.
சாபியா யாமிக் பல இளம் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக மாறினார்.
அவளின் கதையை அறிந்தவர்கள் அனைவரும், பெண்களின் மனவலிமையும் அர்ப்பணிப்பும் எவ்வளவு வலிமையானவை என்பதை உணர்ந்ததுடன். அவளின் விளையாட்டு பயணத்துடன் கல்வியையும் இணைத்துக் கொண்ட அவள், எதிர்காலத்தில் விளையாட்டு ஆசிரியராகச் செயல்பட்டு தனது அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறாள் என்பது தெரிய வந்தது.
மற்றும் சமூக ஊடகங்களில் அவளுக்கு பெரும் ஆதரவு கிடைத்ததுடன் இளம் தலைமுறையினர் அவளை ஒரு ‘role model’ என குறிப்பிடுகிறார்கள். அவளின் நேர்மறையான அணுகுமுறை மற்றும் தாழ்மையான தன்மை பலரின் இதயத்தை வென்றது.
விளையாட்டு துறையில் பெண்கள் முன்னேறுவதற்கு அவள் வலியுறுத்தும் முக்கியமான செய்தி “பெண்களும் முடியும்” என்பதே. அவளின் பயணம் அந்த செய்தியின் உயிர்த்த சான்றாகத் திகழ்கிறது.பாத்திமா சாபியா யாமிக், இலங்கையின் விளையாட்டு வரலாற்றில் தன்னுடைய இடத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டுள்ளார். அவளின் உழைப்பும் தியாகமும் எதிர்கால தலைமுறைகளுக்கு ஊக்கமாய் நிற்கும்.
அவள் வென்ற பதக்கங்கள் வெறும் உலோகத் துண்டுகள் அல்ல, அவளின் முயற்சியும் மனவலிமையும் கொண்ட வாழ்வின் சின்னங்களாகும். இதனை பாத்திமா சாபியாவின் வாழ்க்கை ஒரு செய்தி “வெற்றி பெறுவது உடல் வலிமையால் அல்ல, மன உறுதியால்”. என்று கூறுகின்றது.
அவளின் ஓட்டம் இலங்கையின் விளையாட்டு துறையில் புதிய தலைமுறையை எழுப்பியுள்ளது. அந்த ஓட்டம் இன்னும் நிற்கவில்லை; அது இன்னும் பலரின் கனவுகளை முன்னோக்கிக் கொண்டு செல்கிறது.
2025ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசியத் தடகள சாம்பியன்ஷிப் அவரது வாழ்க்கையின் பெரும் திருப்பமாக அமைந்தது. இந்தப் போட்டி இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்றது. அங்கு அவர் தங்கப் பதக்கங்களை மூன்றும் வென்று டிரிபிள் கோல்ட் சாதனை படைத்தார்.
இந்த மூன்று வெற்றிகளும் வெறும் பதக்கங்களல்ல . அவை புதிய சாம்பியன்ஷிப் சாதனைகளாகவும் அமைந்தன. அவர் வென்ற ஒவ்வொரு ஓட்டத்திலும் இலங்கைப் பெண்கள் தடகள வரலாற்றில் புதிய பக்கங்கள் எழுதப்பட்டன.
இலங்கை கொடியை உயர்த்தி பிடித்த அந்த தருணம் அவரது வாழ்க்கையின் பெரும் பெருமையாக இருந்தது.பாத்திமா யாமிக்கின் சாதனைக்குப் பின்னால் ஒவ்வொரு நாளும் ஓடிய கிலோமீட்டர்கள், வியர்வை, மன அழுத்தம் அனைத்தும் உள்ளன.
அவர் தனது பயிற்சியில் எந்த நாளையும் விடாமல் தொடர்ந்தார். தோல்விகளும் அவரை தடுக்கவில்லை; மாறாக அவை அவருக்கு மேலும் உற்சாகம் அளித்தன.
அவர் பல முறை சர்வதேச அளவிலான போட்டிகளில் அனுபவத்தைப் பெற்றார். அதன் மூலம் வேகம் மட்டுமல்லாமல், மனநிலை சமநிலை, போட்டி மனப்பாங்கு, மற்றும் இலக்கு நம்பிக்கை ஆகியவற்றையும் வளர்த்துக்கொண்டார்.
அவருக்கு இருக்கும் மிகப் பெரிய சவால்களான, சர்வதேச தரமான வசதிகள் இல்லாத சூழல். இலங்கையில் தடகள வீரர்களுக்கான மேம்பட்ட பயிற்சி மையங்கள் குறைவாக உள்ளன. ஆனால், அந்த சவாலை அவர் மனவலிமையால் சமாளித்தார்.
அவர் கூறியபடி, “எனது மூன்று தங்கங்கள் என் நாட்டுக்காக. இது எனது பயணத்தின் ஆரம்பம் மட்டுமே, இன்னும் பல சாதனைகள் இலங்கைக்காக செய்ய விரும்புகிறேன்.” இந்த வார்த்தைகள் அவரது தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.
அவரின் கடின உழைப்பை பார்த்து நாட்டின் பல இளம் பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அவர் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளார். அவரின் வெற்றிகள் பெண்களின் விளையாட்டு பங்கேற்பை ஊக்குவிக்கின்றன.
அவர் தனது பயிற்சியாளர்கள், குடும்பம், மற்றும் சக வீராங்கனைகளுக்கு நன்றி தெரிவிக்கிறார். “என்னை நம்பியவர்களின் நம்பிக்கையை நான் கைவிடமாட்டேன்” என்ற அவரது கருத்து பலரின் மனதைக் கவர்ந்தது.
பாத்திமா தனது தனிப்பட்ட சிறந்த நேரங்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார்.100 மீட்டரில் 11.51 வினாடிகள் மற்றும் 200 மீட்டரில் 23.58 வினாடிகள் எனும் நேரங்கள், அவர் ஆசிய மட்டத்தில் போட்டியிடும் திறனைக் காட்டுகின்றன.
அவரது சாதனைகள் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பெருமையுடன் பகிரப்பட்டன. பலரும் அவரை இலங்கையின் “தங்க வேகப் புயல்” என அழைத்தனர். அவர் நாட்டின் பெருமையாக திகழ்ந்தார்.
இப்போது அவரது நோக்கம் உலக தடகள அரங்கில் இலங்கை பெயரைப் பதியச் செய்வது. அவர் தற்போது ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் தகுதிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கையின் விளையாட்டு நிர்வாகமும், ஊடகங்களும் இவரைப் பற்றிய பெரும் நம்பிக்கையுடன் இருக்கின்றன. அவரை ஆதரிக்கும் விதத்தில் பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அவர் எதிர்காலத்தில் ஒரு பயிற்சியாளராகவும் பெண்கள் விளையாட்டில் வழிகாட்டியாகவும் உருவாக விரும்புகிறார்.
அவர் சொல்வது போல, “என்னைப் போல இன்னும் பலர் ஓட்டத்தில் பிறக்க வேண்டும்” என்பது அவரது கனவு.அவரது வாழ்க்கை நமக்கு ஒரு முக்கியப் பாடத்தைக் கற்பிக்கிறது. சூழல் எப்படியிருந்தாலும், கனவு தெளிவாக இருந்தால் அது நிஜமாகும். அவரது கடின உழைப்பு இதற்குச் சான்றாகும்.
இன்று பாத்திமா ஷாபியா யாமிக் இலங்கையின் தடகள வரலாற்றில் ஒரு மின்னும் நட்சத்திரம். அவர் சாதனைகள் நாட்டின் இளம் தலைமுறைக்குப் புதுவழி காட்டுகின்றன.
அவரது ஓட்டம் வெறும் ஓட்டமல்ல. அது கனவுகளின் ஓட்டம், நாட்டின் நம்பிக்கையின் ஓட்டம், பெண்களின் திறனின் சின்னம். பாத்திமா யாமிக் என்ற பெயர் இலங்கையின் தடகள வரலாற்றில் என்றும் ஒளிரும்.
அப்துல் அஸீஸ் அஸ்மா,
ஊடகக் கற்கைகள் துறை,
யாழ்.பல்கலைக்கழகம்