பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்களுக்கே பாதுகாப்பு தேவை

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்களுக்கே பாதுகாப்பு தேவைப்படுவதாக பிரதி அமைச்சர் ரி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்ற கும்பல்களுடன் தொடர்பு பேணும் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருள் கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய தரப்பினருக்கு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் எழும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் பாதுகாப்பு தேவையான தரப்பினருக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்கள் கிடையாது என பிரதி அமைச்சர் ரி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் பாதுகாப்பு தொடர்பில் பிரதி அமைச்சர் சரத் பல்வேறு விமர்சனங்களை அண்மைக்காலமாக வெளியிட்டு வருகின்றார்.

இலங்கையின் எந்தவொரு பகுதிக்கும் பாதுகாப்பு இன்றி தம்மால் செல்ல முடியும் எனுவும் எந்தவொரு குற்றக் கும்பலுடனும் தொடர்பு கிடையாது என அவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version