ஒரு பக்கம் சாண்ட்ராவின் அலப்பறை, சக பணியாளர்களின் பதட்டம், கெஞ்சல், விருந்தினர்களின் கோபம்… என்று வீடு ரகளையாக இருக்க, புது மேனேஜர் விக்ரம் திண்டாடிப்போனார்.-(வீடியோ இணைப்பு)
சீக்ரெட் டாஸ்க் பற்றி பிக் பாஸ் சொல்லும்போது, இதை சாண்ட்ரா செய்து முடிக்க மாட்டாரோ என்று தோன்றியது. அத்தனை அவநம்பிக்கையாகத் தெரிந்தார்.
ஆனால் களத்தில் இறங்கி ஒற்றை ஆளாக மற்றவர்களைக் கதற விட்டு இந்த டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்துவிட்டார்கள். அதற்கு சில பல கண்ணீர் துளிகளை பலியாகத் தர வேண்டியிருந்தது.
தனக்கு சீக்ரெட் டாஸ்க் தரப்பட்ட சில நிமிடங்களிலேயே அலப்பறையை ஆரம்பித்துவிட்டார் சாண்ட்ரா. “கிச்சன் டிபார்ட்மென்ட்டில் எனக்கு திவாகர் வேண்டாம். சொன்ன வேலை ஒண்ணுகூட செய்யறதில்லை. யாரும் உதவிக்கு வரதில்லை. திவாகரை வெளியே அனுப்புங்க” என்று மேனேஜர் விக்ரமிடம் கதறிக் கொண்டிருந்தார். நல்ல ஃபெர்பாமன்ஸ்.
‘என்னடா.. இது சோதனை’ என்று விக்ரம் போய் திவாகரிடம் சொன்னால் ‘அதெல்லாம் என்னால மாற முடியாது. நான் என்ன தப்பு பண்ணேன்?’ என்று அடம்பிடிக்க விக்ரமிற்கு தோல்வி.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 32
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 32 | 06/11/2025
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 31
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 31 | 05/11/2025

