நுகேகொடையில் நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் எதிர்ப்பு பேரணியானது, அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கட்சி அலுவலகத்தில் நேற்று இரவு நடந்த கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுக்கு உரையாற்றிய நாமல், கடந்த காலங்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் விவாதங்கள் நடத்தப்பட்டன, ஆனால் இன்று பேரணியின் வெற்றியை உறுதி செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியை சந்தித்தோம்.

வாக்குறுதிகளை வழங்கியவாறு அதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து கெப் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பிலேயே கவனம் செலுத்தியுள்ளது.

அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைப்பதற்கும் அதன் உறுதிமொழிகளின்படி செயல்பட ஊக்குவிப்பதையும் இந்த பேரணி நோக்கமாக கொண்டது.

அரசாங்கக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட பலர் இந்த பேரணியில் இணைவார்கள் என்றும் நாமல் கூறினார். அதே நேரத்தில் மற்ற கட்சிகளுடனான விவாதங்களுக்குப் பிறகு தங்கள் ஈடுபாட்டை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version