தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் சில படங்கள் வசூல் என்ற ஓட்டத்தை தாண்டி ரசிகர்களின் சினிமா ரசிப்பு தன்மைக்காக வரும், அந்த வகையில் வந்துள்ள இந்த கிணறு எப்படி பார்ப்போமா.
கதைக்களம்
படத்தின் கதைக்களமாக சிறுவர்களை வைத்து தொடங்கியுள்ளனர், 4 சிறுவர்கள் ஆசையாக குளிக்க ஒரு கிணற்றிற்கு போக அங்கு அவர்கள் துரத்தி விடப்படுகிறார்கள்.
இதனால் கோபமான அந்த 4 சிறுவர்கள், தாங்களே ஒரு கிணற்றை உருவாக்க வேண்டும் என எண்ணுகின்றனர்.
ஆரம்பத்தில் இவர்கள் எதோ விளையாட்டுக்கு செய்கிறார்கள் என்று நினைத்தால், போக போக இவை எத்தகைய மாற்றத்தை உருவாக்குகிறது என்பதன் அழகிய உணர்வே இந்த கிணறு.

