“ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கரிவிடி மண்டலம், கோனூரில் நேற்று ஒரு வீட்டில் பூஜை செய்தனர். பின்னர் மொட்டை மாடியில் விளக்கேற்றி வைத்தனர்.
அந்த விளக்கின் மேல் பகுதியில் தூக்கி செல்லும் வகையில் கம்பி இருந்தது.அங்கு வந்த ஒரு காகம் விளக்கை தனது கால்களால் அலேக்காக தூக்கி சென்றது.
அதை ஒரு குடிசை வீட்டின் மீது போட்டது. இதனால் வீடு தீப்பிடித்தது. அருகே இருந்த மேலும் 3 குடிசை வீடுகளும் எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர்.குத்தகை விவசாயியான கோபி என்பவரது வீடு முழுமையாக எரிந்தது.
அவர் ரூ.1 லட்சம் கடன் வாங்கி தனது வீட்டில் வைத்திருந்தார். அந்த பணத்துடன் தங்க நகைகளும் எரிந்தன.தாசில்தார் சி.எச் பங்கர்ராஜு சம்பவ இடத்தை ஆய்வு செய்து, சொத்து இழப்பு சுமார் ரூ.4 லட்சம் என்று மதிப்பிட்டனர். அரசாங்கத்திடமிருந்து நிதி உதவி அளிக்கப்படும் என தெரிவித்தனர்.”,

