மட்டு போதனா வைத்தியசாலையில் நோய்காக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு உதவியாக இருந்த பெண் ஒருவரின் கைப்பையில் வைத்திருந்த கையடக்க தொலைபேசி மற்றும் 10 ஆயிரம் ரூபா பணத்துடன் கைப்பை திருட்டு போயுள்ளது தொடர்பாக கடந்த 2 தினங்களுக்கு முன்னர் மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் ஏறாவூர் பிரதான வீதியில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் இளைஞன் ஒருவர் 5 கையடக்க தொலைபேசிகளை கொண்டு சென்ற அதன் இரகசிய எண் கொண்ட பூட்டு உடைத்து தருமாறு அந்த கடை உரிமையாளரிடம் வழங்கியுள்ளார்

இது தொடர்பாக மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து உடனடியாக சம்பவ தினமான நேற்று இரவு முற்றுகையிட்ட பொலிசார் குறித்த இளைஞனை கைது செய்து விசாரணையின் போது குறித்த தொலைபேசிகளை மட்டு போதனா வைத்தியசாலையில் திருடி உள்ளதாக தெரிய வந்துள்ளதையடுத்து கடை உரிமையாளர் உட்பட இருவரையும் கைது செய்ததுடன் திருடப்பட்ட 18 கையடக்க தொலைபேசிகள் மற்றும் களணி ஒன்று உட்பட உபகரணங்களை மீட்டனர்.

இவ்வாறு கைது செய்தவர்களை மட்டு தலைமையக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து ஏறாவூர் மிச் நகரைச் சேர்ந்த 23 வயதுடைய குறித்த இளைஞன் கிழமையில் ஒரு நாள் வைத்தியசாலைக்குள் நுழைந்து வாட்களில் தங்கியிருக்கும் நோயாளர்கள் மலசல கூடம் செல்லும் போது அவர்களின் கையடக்க தொலைபேசி பணம் மற்றும் நோயாளிகளுக்கு உதவியாக இருப்பார்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட பலரின் கையடக்க தொலைபேசிகளை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக திருடி வந்துள்ளதாகவும்

அதை ஏறாவூரில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை மற்றும் திருத்தம் குறித்த கடையில் கொடுத்து கையடக்க தொலைபேசியின் இரகசிய எண் கொண்ட பூட்டை உடைத்த பின்னர் அதனை விற்பனை செய்து வந்துள்ளது பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.  

Share.
Leave A Reply

Exit mobile version