திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி 10 கட்டை பகுதியில் இன்று (13) இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

மஹதிவுல்வெவ பகுதியில் இருந்து தம்பலகாமம் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு சென்ற பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் கபுகொல்லாவ-ஆனவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த 19 வயதான எஹியா உல்முதீன் சஹீல் அஹமட் எனவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version