அண்மையில் நடைபெற்ற ராஜதந்திர நடவடிக்கை மாற்றங்களின் தொடர்ச்சியாக, ஆறு ஆண்டுகள் நிறைவில் புதுடெல்லி–சீனா இடையிலான விமான சேவையை 2026 பெப்ரவரி முதல் மீண்டும் தொடங்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. தேவையான ஒழுங்குமுறை அனுமதிகள் கிடைத்தால், அடுத்த ஆண்டு இறுதியில் மும்பை–சங்காய் புதிய விமான வழித்தடமும் தொடங்கப்பட உள்ளது.

இந்த முன்னேற்றம், இந்தியா–சீனா உறவுகளில் நேர்மறையான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் நடைபெற்ற சங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு குழு கூட்டத்தில் பங்கேற்றது இரு நாடுகளின் உறவுகளை புதிய பாதைக்கு கொண்டு சென்றது. அந்த சந்திப்பில், மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் “போட்டியாளர்கள் அல்ல, வளர்ச்சி பங்காளிகள்” என ஒருமித்து கருத்து தெரிவித்தனர்.

கடந்த மாதம், இண்டிகோவும் கொல்கத்தா–குவாங்சோ விமான சேவையை மீண்டும் துவக்கியது. இதன் மூலம், இந்தியா–சீனா விமான இணைப்புகள் படிப்படியாக மீளச் சீராகிக் கொண்டிருக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version