திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, இலங்கை அமரபுர மகா நிகாய மகாநாயக்க தேரர் கரகோட உயன்கொட மைத்ரி மூர்த்தி தேரர் ஜனாதிபதிக்கு அவசரமான கடிதம் அனுப்பியுள்ளார். 1951 முதல் பௌத்த விவகார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதும், 2014ஆம் ஆண்டு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரத்தால் உரிமை உறுதிசெய்யப்பட்டதுமான ஒரு சட்டப்பூர்வ விகாரைக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அச்சுறுத்தல்கள் இடம்பெற்ற நிலையில், பிக்குகள் மீது பொலிஸாரால் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அவர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் பிரதான பிக்கு ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது அரசியலமைப்பின் 9வது சரத்தை நேரடியாக மீறும் செயலாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, பொலிஸின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், விகாரை கட்டடத்தை அகற்ற வேண்டாம் என்றும், பிக்குகள் மற்றும் விகாரைக்கு பாதுகாப்பு வழங்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மகாநாயக்க தேரர் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version