ஹாலிவுட் எப்போதும் வித்தியாசமான கதைகளுக்குப் பெயர் பெற்றது. அந்த வரிசையில், Netflix-ல் வெளியாகியிருக்கும் Frankenstein திரைப்படம், கில்லெர்மோ டெல் டோரோவின் புதிய படைப்பாக, மனித உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அதிரடி–இருண்மை கலந்த த்ரில்லர் படமாக ரசிகர்களால் வரவேற்கப்படுகிறது.
படம் விக்டர் என்ற விஞ்ஞானியின் ஓட்டத்துடன் தொடங்குகிறது. அவரை பின் தொடர்ந்து வரும் உயிர்—அவரே பிணங்களின் துண்டுகளை இணைத்து உருவாக்கிய “ராட்சசன்”—இடம் பெறும்போது கதையின் மையக்கரு விளங்குகிறது. இறந்த உடல்களில் இருந்து உயிரை உருவாக்கும் விக்டர், அந்த உயிருக்கு அன்பு வழங்க தவறியதால், மனிதனை வெறுக்கும் ராட்சனாக மாறும் கதை படத்தின் முதுகெலும்பாக அமைகிறது.
கில்லெர்மோ டெல் டோரோ வித்தியாசமான மனித உணர்ச்சிகளை மிக அழுத்தமாக, எந்திரன் போன்ற கூறுகளுடன் கலந்து, “அன்பு மனிதனையும் மிருகத்தையும் மாற்றுகிறது” என்ற கருத்தை மிகக் கூர்மையாக சொல்லியுள்ளார்.
ராட்சசன் ஒரு குடும்பத்திடம் சென்று அவர்களுக்கு உதவுவது, கண் தெரியாத தாத்தாவின் அன்பால் மாறுவது போன்ற காட்சிகள் இதயத்தை நெருக்கும் வகையில் வெளிப்பட்டுள்ளன.
டெக்னிக்கல் லெவலிலும் சிஜி வேலை மிரட்டல் என பாராட்டப்படுகிறது. ஆனால் மனித உடற்பாகங்களை காட்டும் சில காட்சிகள் இளகிய மனதுடையவர்கள் தவிர்க்க வேண்டியவை.
க்ளாப்ஸ்:
-
வித்தியாசமான கதை
-
வலுவான திரைக்கதை
-
உணர்ச்சி நிறைந்த வசனங்கள்
-
பிரமாதமான CGI
பல்ப்ஸ்:
-
உடல்பாகங்களைக் காட்டும் காட்சிகள் சிலருக்கு கடினமாக இருக்கலாம்
மொத்தத்தில், மனிதன், மிருகம் அல்லது ராட்சசன்—அன்பு தான் எல்லோரையும் மாற்றும் சக்தி என்று சொல்லும் படைப்பாக Frankenstein Netflix-ல் தவறாமல் பார்க்க வேண்டிய படமாக திகழ்கிறது.

