திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் விவாதத்துக்கு புதிய தீப்பொறி ஏற்றியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக 21ஆம் திகதி அரசுக்கு எதிராக நடைபெறும் பேரணியை முன்னிட்டு திட்டமிட்ட சதி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், புத்தர் சிலை சம்பவத்தின் போது ஒரு பௌத்த துறவி பொலிஸாரை அறைந்த காட்சி வைரலாகியுள்ள நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்காக ராஜபக்ச அணியினர் பேசிவருகின்றனர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

அதேபோல், அம்பிட்டியே சுமனரதன தேரர் வெளியிட்ட காணொளியில், தாம் “ராஜபக்ச பீடத்தைச் சேர்ந்தவர்கள்” என்றும், “ராஜபக்சர்களுக்காக காவியுடை அணிந்தவர்கள்” என்றும் குறிப்பிட்டிருப்பது நிலைமைக்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சை மேலும் எந்த திசையில் நகரும் என்பது தற்போது கவனத்துக்கு உள்ளதாகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version