யாழ்ப்பாணம் – வடமராட்சி கரணவாய் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பருத்தித்துறை மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று(19) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நெல்லியடியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக நெல்லியடி காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் தொலைபேசியில் வந்த செய்தியைத் தொடர்ந்து உந்துருளியில் வீட்டை விட்டு வெளியேறியதும், வீடு திரும்பாதநிலையில், அவரது பெற்றோர் வீட்டின் அருகே உள்ள வீதியில் வெட்டுக்காயங்களுடன் குறித்த இளைஞன் கிடந்ததைக் கண்டுள்ளனர்.
உடலம் மந்திகை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது, சந்தேக நபர்களைக் கைது செய்ய நெல்லியடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

