ஒருவழியாக இந்த ‘ஆப்பு’ டாஸ்க் இறுதிக் கட்டத்திற்கு வந்தது. பாயிண்ட்ஸ் தர வேண்டிய நேரம். இதிலும் சாம்பார் அணியின் அலப்பறை தொடர்ந்தது.

‘FUN TASKக்கா பண்ணுங்க’ என்று பிக் பாஸ் தலையால் அடித்துக் கொண்டாலும் ‘சோறு – சோப்பு – மாப்பு டாஸ்க்கில் நமக்கு கிடைத்தது என்னமோ ஆப்புதான். எண்டர்டெயின்மென்ட்க்கு பதிலாக வன்மம்தான் தெரிந்தது.

அதிலும் பாருவும் சாண்ட்ராவும் ஒருவருக்கு ஒருவருக்கு சளைக்காத வன்ம குடோனாகவே திகழ்கிறார்கள். இந்த டாஸ்க் நாசமாகப் போனதற்கு இந்த இருவர்தான் முக்கிய காரணம்.

நள்ளிரவைத் தாண்டியும் சாம்பார் அணி கூடி அமர்ந்து சதியாலோசனை செய்து கொண்டிருந்தது. சதி என்னும் போதே அதற்கு பாருதான் தலைமை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். “நாமளும் மூணு வேளைதான் வடிச்சுக் கொட்டறோம்.

ஆனா இவிய்ங்க பாயிண்டே தரமாட்றாங்க.. நாளைக்கு இவிய்ங்களுக்கு சோறு கிடையாது. வெறும் கஞ்சிதான்” என்று பாரு சொன்ன ஐடியாவை சாண்டரா வழிமொழிய அணி ஏற்றுக் கொண்டது.

இது அன்றாட வேலைகள் கூடவே எண்டர்டெயின்ட்மென்ட்டும் இணைத்து செய்யும் டாஸ்க். ஆகவே சமைப்பது என்பது அவர்களின் வழக்கமான பணி. ஆனால் சாம்பார் அணியில் எண்டர்டெயின்மென்ட் இருக்கிறதா, என்றால் இல்லை. வெறும் வன்மம்தான் தெரிகிறது. இவர்களிடம் கிரியேட்டிவிட்டியும் இல்லை. எனில் எப்படி பாயிண்ட் கிடைக்கும்?

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 45

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 46|20/11/2025

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 45

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 45|19/11/2025

Share.
Leave A Reply

Exit mobile version