தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராதிகா சரத்குமார், தொடர்ந்து அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் மெருகேற்றிக் கொண்டிருப்பவர். இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராதிகா, தனது குடும்ப அப்டேட்களை பகிர்ந்து வருபவர். தற்போது தனது புதிய இல்லத்தின் கிரஹப்பிரவேச நிகழ்வை நடத்தி, இயக்குநர் கவுதம் மேனன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்களை வரவேற்றுள்ளார். அந்த சிறப்பு தருணங்களின் புகைப்படங்களை ராதிகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

