சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கேணியடி வட்டுக்கோட்டை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் வட்டுக்கோட்டை வடக்கு சித்தங்கேணியைச் சேர்ந்த கணேசமூர்த்தி நாகேந்திரம் (வயது 68) என்ற ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நெறிப்படுத்தினர்.

Share.
Leave A Reply

Exit mobile version