கஹதுடுவவில் உள்ள மாவட்ட வைத்தியசாலையில் 26 வயது பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக 40 வயது வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

 பாலியல் துஷ்பிரயோகம்

நவம்பர் 12 ஆம் திகதி வைத்தியசாலையின் வெளிநோயாளிகள் பிரிவுக்கு சிகிச்சை பெற வந்ததாகவும், சிறுநீர் பரிசோதனை செய்து கொண்டு நவம்பர் 19 ஆம் திகதி மீண்டும் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அந்தப் பெண் பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரின்படி, அந்தப் பெண் நவம்பர் 19 ஆம் திகதி சிறுநீர் அறிக்கையுடன் வெளிநோயாளிகள் பிரிவுக்கு வந்த போது வைத்தியர் ஒரு பெண் உதவியாளரின் உதவியின்றி அவரை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, அவரைப் பரிசோதிப்பது போல் நடித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைக்காக இரு தரப்பினரும் அழைக்கப்பட்ட பின்னர், நேற்று பொலிஸார் மருத்துவரைக் கைது செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version