பொதுவாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் மாதுளை.

இந்த பழத்தில் அதிகமான வைட்டமின், கால்சியம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக உள்ளது. இதனால் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மாதுளைப்பழத்தை நம்மில் பலரும் வாங்கி சாப்பிடுவார்கள்.

குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸில் மாதுளம் பழத்தை அடிக்கடி பார்க்கலாம். ஏனெனின் இதிலுள்ள அதிகப்படியான ஊட்டசத்துக்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மாதுளைகளை அதிக அளவில் சந்தையில் இருந்து வாங்கி, வீட்டிற்கு கொண்டு வந்தது சேமித்து வைப்பது வழக்கம். அப்படி குளிர்சாதன பெட்டியில் வாங்கி சேமிக்கும் பொழுது அதன் சுவையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

அநேகமான நோய்களுக்கு மருந்தாக இருக்கும் பழங்களில் ஒன்றான மாதுளம் பழத்தை இலங்கையில் றீச்ஷா பண்ணை பயிரிட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version