கம்பஹா, நிட்டம்புவ பொலிஸ் நிலையத்திற்குள் அநாகரீகமாக நடந்து கொண்ட ஒரு பெண் செவிலியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபரை தடுத்து வைக்க பொலிஸாருக்கு உரிமை இல்லை என்று கூறி, அவர் பொலிஸ் நிலையத்திற்குள் அதிகாரிகளின் பணிகளில் இடையூறு விளைவித்துள்ளார். இதனால் அவர் கைது செய்யப்பட்டதுடன், நிட்டம்புவ பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version