அண்மைய நாட்களாக வடக்கில் பெய்த கனமழை மற்றும் நீர்மட்டம் உயர்வின் காரணமாக, பரந்தன் – புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 பிரதான வீதி பாரியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடமான வட்டுவாகல் பாலத்தை அண்டியுள்ள A35 வீதி, வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டு இரண்டு துண்டுகளாகப் பிளவடைந்துள்ளதால், வீதியூடான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. பிளவுபட்ட பகுதி வழியாக வெள்ள நீர் மிக வேகமாகப் பாய்ந்தோடுகிறது.

அனர்த்த முகாமைத்துவ மையத்தின் அறிவுறுத்தல்:

  • குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியத் தேவைகளின் நிமித்தம் முல்லைத்தீவிற்குப் பயணம் செய்வோர் மாற்று வழியைப் பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

  • பயணிகள் புதுக்குடியிருப்பு – கேப்பாபிலவு வழியான மாற்றுப் பாதையைப் பயன்படுத்தலாம்.

Share.
Leave A Reply

Exit mobile version