நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் இதுவரையான காலப்பகுதியில், 391,401 குடும்பங்களைச் சேர்ந்த 1,364,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தத்தினால் சுமார் 643 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதுடன், 184 பேர் காணாமல் போயுள்ளனர்.

அத்துடன், 6,164 வீடுகள் முழுமையாகவும், 112,110 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

796 தங்குமிடங்களில் 23,041 குடும்பங்களை சேர்ந்த 72,911 பேர் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version