சமீபகாலமாக, கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் (Biopics) இந்திய சினிமாவில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அந்த வகையில், தற்போது பிரபல கர்நாடக இசைக்கலைஞரான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்துத் திரைப்படம் எடுக்கும் பணிகள் தெலுங்கு வட்டாரத்தில் தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகை சாய் பல்லவியிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version