யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் நேற்று (டிசம்பர் 16) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், போதைத் தடுப்பு பொலிஸார் இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 210 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version