சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது.பிரதேச சபையின் சில உறுப்பினர்கள், கூட்டத்திற்கு தமக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, பிரதேச செயலகத்திற்கு வெளியே முரண்பாட்டில் ஈடுபட்டனர்.அவர்கள் கூறியதாவது, மக்கள் பிரதிநிதிகள் என்ற நம்பிக்கையுடன், சமூகமட்ட அமைப்புக்களுக்கு வழங்கப்படும் அனுமதியை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா, வேறொரு வாகனத்தில் திருட்டுத்தனமாக கூட்டத்தில் வந்ததாகவும், அத்துடன் ஆளும் கட்சியின் ஆறு உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.இதனால் கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது; ஐந்து உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்ட நிலையில் கூட்டம் தொடங்கியது.

Share.
Leave A Reply

Exit mobile version