இயக்குநர் வருண் ரெட்டி இயக்கத்தில் ஸ்ரீ நந்து, யாமினி பாஸ்கர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சைக் சித்தார்த்தா’ திரைப்படம், துரோகம் மற்றும் புதிய உறவுகள் குறித்த ஒரு வித்தியாசமான பயணத்தை நகைச்சுவை கலந்து பேசுகிறது.
-
கதைக்களம்: காதலி மற்றும் தொழில் பார்ட்னரால் ஏமாற்றப்பட்டு விரக்தியில் இருக்கும் சித்தார்த் (ஸ்ரீ நந்து), தனது கணவனின் சித்ரவதைக்குப் பயந்து மகனுடன் தப்பித்து வரும் ஷ்ரவ்யா (யாமினி பாஸ்கர்) ஆகிய இருவருக்கும் இடையிலான சந்திப்பும், அதன் பின்னரான கலகலப்பான நிகழ்வுகளுமே படத்தின் கதை.
-
நடிப்பு: சித்தார்த்தாக ஸ்ரீ நந்து எமோஷனல் மற்றும் காமெடியில் அசத்தியுள்ளார். ஷ்ரவ்யாவாக வரும் யாமினி பாஸ்கர் தனது அழகாலும் முதிர்ச்சியான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
-
தொழில்நுட்பம்: சமரன் சாயின் இசை மற்றும் பிரகாஷ் ரெட்டியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது. டிஜே தில்லு பாணியிலான திரைக்கதை இளைஞர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
-
நிறை & குறை: இரண்டாம் பாதியில் வரும் காமெடி காட்சிகள் படத்திற்கு பெரும் ப்ளஸ். இருப்பினும், அதிகப்படியான அடல்ட் கன்டென்ட் (Adult Content) காரணமாக இது குடும்பத்துடன் பார்க்கும் படமாக அமையவில்லை. ஆனால், திருமண வன்முறை குறித்த ஆழமான கருத்துக்களைப் பேசியதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

