அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து வீரரின் சிறப்பான சாதனை

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்து கவனம் ஈர்த்துள்ளார்.

கடைசி டெஸ்ட் போட்டி

இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 384 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் பதிலுக்கு விளையாடிய அவுஸ்திரேலிய அணி 567 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 138 ஓட்டங்களும், வெப்ஸ்டர் 71 ஓட்டங்களும் விளாசினர். இங்கிலாந்து தரப்பில் கார்ஸ் மற்றும் டங் தலா 3 விக்கெட்டுகள், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்சில் அதிரடி

இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு, மிட்செல் ஸ்டார்க் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். அவரது பந்துவீச்சில் ஜாக் கிராவ்லே 1 ரன்னில் வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து பென் டக்கெட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் இணைந்து அணியின் இன்னிங்சை முன்னெடுத்தனர். அதிரடியாக விளையாடிய டக்கெட், 55 பந்துகளில் 42 ஓட்டங்கள் (6 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஜோ ரூட் 6 ஓட்டங்களில் வெளியேறினார்.

ஜேக்கப் பெத்தேலின் முதல் சதம்

இதனையடுத்து ஹாரி ப்ரூக் களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஜேக்கப் பெத்தேல் அரைசதத்தை கடந்தார். 99 ஓட்டங்களில் இருந்த போது சற்று நேரம் பொறுமை காட்டிய பெத்தேல், பின்னர் பவுண்டரி அடித்து முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் மூலம், ஆஷஸ் தொடரில் முதல் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் ஜேக்கப் பெத்தேல் தனது பெயரை சேர்த்துள்ளார். இளம் வீரரின் இந்த இன்னிங்ஸ் இங்கிலாந்து அணிக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version