பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து சில நாட்களாக அந்த வீட்டைக் கண்காணித்து வந்த பொலிஸார், நேற்று முன்தினம் (ஜனவரி 10) இந்தச் சோதனையை முன்னெடுத்தனர்.

 திருநெல்வேலி பகுதியில் புலம்பெயர்ந்து வாழும் ஒருவருக்குச் சொந்தமான நவீன சொகுசு வீட்டினை, கிளிநொச்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் தங்குவதற்காக என்று கூறி வாடகைக்கு எடுத்துள்ளார்.

 அந்த வீட்டிற்கு அடிக்கடி சொகுசு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஆண்களும் பெண்களும் வந்து செல்வதைக் கவனித்த அப்பகுதி மக்கள் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

 பொலிஸார் நடத்திய அதிரடிச் சோதனையில், அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் விடுதியை நடத்தி வந்த கிளிநொச்சி நபர் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.

 நேற்றைய தினம் (ஜனவரி 11) சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version