புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், முந்தல் – நவத்தன்குளம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். காரும் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் காரில் பயணித்த இரண்டு பெண்களும் ஒரு ஆணும் அடங்குவர்.

இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ள நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், விபத்துக்கான காரணம் குறித்து முந்தல் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரதான வீதியிலான போக்குவரத்துப் பாதிப்புகள் தற்போது சீர்செய்யப்பட்டு வருகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version