ட்ரம்ப் ஒரு கோழை என்றும், முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு அமெரிக்காவுக்கு சவால் விடுத்துள்ளதாக கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்குள் கடந்த வாரம் அமெரிக்க சிறப்பு படையினர் அதிரடியாக நுழைந்து, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸை கைது செய்து அமெரிக்கா அழைத்து சென்று நியூயார்க் சிறையில் அடைத்த சம்பவம் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு நேரடியாக சவால் விடுத்துள்ளார். அவர் கூறுகையில், “என்னை அழைத்துச் செல்லுங்கள், கைது செய்யுங்கள். உங்களுக்காக நான் இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறேன். ட்ரம்ப், நீங்கள் ஒரு கோழை. அவர்கள் குண்டு வீசினால் இங்குள்ள மக்கள் கொரில்லாக்களாக மாறுவார்கள். நான் மீண்டும் ஆயுதத்தை தொடமாட்டேன் என்று சபதம் செய்துள்ளேன். ஆனால் தாய்நாட்டுக்காக தேவைப்பட்டால் மீண்டும் ஆயுதம் ஏந்த தயார்” என தெரிவித்தார்.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்த அமெரிக்க இராணுவ நடவடிக்கையை முன்னிட்டு, கொலம்பியாவை குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தென் அமெரிக்க நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version