• Who is the hero? என்கிற ஆண்ட்ரியா அட்டகாசமாக பாடிய பாடல் ஒலித்தது. “இன்னிக்கு யாரு வருவாங்கன்னு தெரியல.. துஷார் வந்தா அரோவை கையிலேயே பிடிக்க முடியாது” என்றார் திவ்யா.
வீட்டில் இருப்பவர்களும் மீண்டும் வீடு திரும்பியவர்களுக்குமான சந்திப்புகள் நீடிக்கின்றன. துஷார் வருவதற்கு முன்னால் படப்படப்பாகவும் ஆவலாகவும், வந்த பின்னர் தயங்கி பின்னால் நிற்பதும் என்று அரோரா ஒரு ரொமான்ஸ் காட்சியையே நடத்திக் காட்டினார்.
“நான் வெளியே போனதுக்கு நீ காரணம் இல்ல. Dont blame yourself” என்று அரோராவிடம் துஷார் தெளிவுப்படுத்தியது சிறப்பு.
பெண் போட்டியாளர்களிடம் திவாகர் நிறைய வழிகிறார் என்கிற புகார் முன்பே இருந்தது. ‘அண்ணே.. அண்ணே.’ என்று அழைக்கிற பாருவைக் கூட விடாமல் ‘டார்லிங்’ என்று அழைத்தவர்தான் திவாகர்.
மீண்டும் திரும்பி வந்திருக்கிற போது திவாகரின் அதே விளையாட்டு தொடர்கிறது. இது விளையாட்டாக அல்லாமல் விஷமமாகவும் இருக்கிறது. ‘வியானா குட்டி.. திவ்யா குட்டி’ என்று அவர்களின் பின்னாலேயே அலைகிறார். பதிலுக்கு யாராவது ‘யானைக்குட்டி’ என்றால் என்ன செய்வார் என்று தெரியவில்லை.
இன்றும் அதே சில்மிஷத்தை தொடர்ந்தார் திவாகர். படுக்கையில் சட்டையில்லாமல் படுத்துக் கொண்டு ‘வியானா குட்டி. திவ்யா குட்டி’ என்று கொஞ்சிக் கொண்டிருந்தார். “நாங்க கோ்ல்ஸ்லாம் சோ்ந்து ஒண்ணா படுக்கப் போறோம். நீங்க அந்த ரூம்ல படுத்துக்கங்க” என்று பெண்கள் சொன்ன போது அங்கிருந்து விலக திவாகருக்கு மனதே இல்லை.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? நாள் 99
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 99
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP –98 |12/01/2026
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 98
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP –98 |11/01/2026

