புதிதாக வெளிவரும் திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்களை ரசிகர்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 14ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் முதல் இரண்டு நாட்கள் வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள திரைப்படம்தான் ‘வா வாத்தியார்’. அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வந்தது.

நட்சத்திர நடிகர்கள்

இந்த திரைப்படத்தில் கார்த்தி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், அவருடன் க்ரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கலவையான விமர்சனங்கள்

திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, ‘வா வாத்தியார்’ படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இருப்பினும், ஆரம்ப நாட்களில் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

2 நாட்களில் வசூல்

இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸ் தகவல்களின்படி, ‘வா வாத்தியார்’ திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 6 கோடிக்கு மேற்பட்ட வசூலை ஈட்டியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

வரும் நாட்களில் வார இறுதி வசூலைப் பொறுத்து, படத்தின் மொத்த வசூல் மேலும் அதிகரிக்கும் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version