அமெரிக்காவில் நடைபெற்றுள்ள 41வது உலக திருமதி அழகிப் போட்டியில் இம் முறை தாய்லாந்துப் போட்டியாளர் மகுடம் சூடியுள்ளதுடன் இலங்கை மூன்றாவது இடத்திற்குத் தெரிவானது.

இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று (30) காலை நிறைவடைந்ததுடன் இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட சபீனா யூசுப் இறுதிச் சுற்றின் முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவானதுடன் அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.

போட்டியை நடத்திய நாடான அமெரிக்காவின் போட்டியாளர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

41ஆவது உலக திருமதி அழகிப் போட்டியில் உலகின் 60 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version