தவெக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களுக்கு நேரில் வந்து மக்களை சந்திப்பேன் என வேலூரில் நடைபெற்றக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

வேலூர் மாவட்டம் அகரம் சேரியில் இன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. 4,900 மட்டுமே இக்கூட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அனுமதி சீட்டு இல்லாத தவெகவினர் பலர் அங்கு கூடியிருந்ததை பார்க்கமுடிந்தது.

இந்த நிலையில், 12 மணியளவில் விஜய் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். தொடர்ந்து, பிரச்சார வாகனத்தில் ஏறிய அவர் அங்கிருந்த நிர்வாகிகளிடம் பேசத்தொடங்கினார். அப்போது பேசிய அவர், வழக்கம்போல திமுகவை விமர்சனங்களுடன் பல விஷயங்களைக் குறித்துப் உரையாற்றியிருக்கிறார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version