மும்பை: உதய்பூரில் இன்று விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
குறிப்பிட்ட சில விஐபி பிரபலங்களுக்கு மட்டுமே திருமணத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
அம்பானி குடும்பத்தினர் சங்கீத் மற்றும் மெஹந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின.
விரோஷ் ப்ரீமியர் லீக் என்ற ஒன்றையே உதய்பூரில் பிரம்மாண்டமாக ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா ஜோடியினர் செய்து அசத்தினர்.

அதில், நடிகை ராஷ்மிகா தனது கழுத்தில் தாலி ஏறும் போது கண்கலங்கும் புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் பண்ணி வருகின்றனர்.
காதல் திருமணம் களைகட்டியது: விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் தெலுங்கில் வெளியான கீத கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்த போதே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துவிட்டது எனக் கூறுகின்றனர்.
ஆனால், பல ஆண்டுகளாக தங்களது காதலை ரகசியமாக பாதுகாக்க நினைத்தனர். ஆனால், அவர்கள் கொடுத்த சிக்னலை வைத்து ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் இருவரும் காதலிப்பதை பலமுறை உறுதி செய்தனர்.
ஆனாலும், தொடர்ந்து ரகசியம் காக்க நினைத்தனர். இந்நிலையில், பல வருட காதலை காத்து வந்த நிலையில், இன்று உதய்பூரில் இருவரும் வெற்றிகரமாக திருமணம் செய்துக் கொண்டு கணவன் மனைவியாக மாறியுள்ளனர். அவர்களது காதல் மேலும், 100 மடங்கு அதிகரிக்குமே தவிர குறையாது என்றே கூறலாம்.
கண்கலங்கிய ராஷ்மிகா மந்தனா: கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடித்த கிரிக் பார்ட்டி படத்தில் தான் ராஷ்மிகா மந்தனா அறிமுகமானார்.
அந்த படத்தில் நடித்த போது ரக்ஷித் ஷெட்டியுடன் காதல் ஏற்பட இருவரும் நிச்சயம் செய்துக் கொண்டனர். ஆனால், ஒரு சில காரணங்களுக்காக இருவரது திருமணமும் நின்றுபோனது.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவுடனான தனது திருமணம் எந்தவொரு தடையுமின்றி நடைபெற வேண்டும் என்பதற்காகவே இத்தனை ஆண்டுகளாக தனது காதலை ரகசியமாக காத்து வந்தார்.
கடைசியில் தனது கழுத்தில் நிஜமாகவே விஜய் தேவரகொண்டா தாலி கட்டிய தருணத்தில் ராஷ்மிகா மந்தனாவின் கண்ணில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வந்த காட்சிகள் புகைப்படங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் இந்த சூப்பர் ஜோடியை வாழ்த்தி வருகின்றனர்.