“அகமதாபாத்:டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது.தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் இன்றும் அதிரடியில் மிரட்டினார்.

அவர் 46 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார். இஷான் கிஷன் 54 ரன்னும், அபிஷேக் சர்மா 52 ரன்னும் எடுத்தனர்.

கடைசியில் அதிரடி காட்டிய ஷிவம் துபே 26 ரன்கள் குவித்தார்.நியூசிலாந்து சார்பில் ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டிம் சைபர்ட் அதிரடியாக ஆடி 52 ரன்கள் குவித்தார்.

கேப்டன் சான்ட்னர் 43 ரன்கள் எடுத்தார்.இறுதியில், நியூசிலாந்து 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்று அசத்தியது.இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், அக்சர் படேல் 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.”,

Share.
Leave A Reply

Exit mobile version