மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 244 ரன்கள் என்ற இமாலய இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களிலேயே கடந்து சாதனை படைத்தது. மும்பை அணியின் ரையான் ரிக்கல்டன் அதிரடியாக 123 ரன்கள் குவித்த போதிலும், டிராவிஸ் ஹெட் (76) மற்றும் ஹென்ரிச் கிளாசன் (65) ஆகியோரின் அதிரடியால் ஹைதராபாத் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், மும்பை அணி 9-வது இடத்திலேயே நீடிக்கிறது.

நேற்றைய போட்டியில் 45 ரன்கள் எடுத்ததன் மூலம், ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா மொத்தம் 425 ரன்களுடன் ஆரஞ்சு தொப்பியை (Orange Cap) வைபவ் சூரியவன்ஷியிடமிருந்து கைப்பற்றினார். அதேபோல், ஊதா நிறத் தொப்பியும் (Purple Cap) தற்போது ஹைதராபாத் வீரர் வசமே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு தொப்பி பட்டியல் (டாப் 5):

வீரர் அணி போட்டிகள் ரன்கள்
அபிஷேக் சர்மா ஹைதராபாத் 9 425
ஹென்ரிச் கிளாசன் ஹைதராபாத் 9 414
வைபவ் சூரியவன்ஷி ராஜஸ்தான் 9 400
கே.எல். ராகுல் டெல்லி 8 358
விராட் கோலி பெங்களூரு 8 351
Share.
Leave A Reply

Exit mobile version